இந்தியாவின் தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் அப் செயலி முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பும் தனிப்பட தகவல்களை அந்நிறுவனம் கண்காணிப்பதாகவும், தேவைப்பட்டால் சேமித்து வைப்பதாகவும் புதிய பிரைவசி கொள்கையை அறிவித்துள்ளது. அதிலும் இது விளம்பரம் சம்பந்தமான விஷயங்களுக்காக பயன்படுத்தப்படும் எனவும் வாட்ஸ் அப்பை நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. மேலும் பல வாடிக்கையாளர்கள் டெலகிராம் மற்றும் சிக்னல் ஆப்பை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். வாட்ஸ் ஆப் செயலி கொண்டு வந்திருக்கும் புதிய தனியுரிமை கொள்கைகள் சர்ச்சையாகியுள்ள நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு வரும் வாரங்களில் பேஸ்புக் அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.