மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா மற்றும் அவரது குழுவினர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே கவர்ச்சியை விரும்பி திரையரங்கிற்கு வரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ் ,தெலுங்கு ,இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஷகிலா படம் வெளியாகும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். அந்த அளவுக்கு அவருக்கு மார்க்கெட் இருந்தது. அந்தளவுக்கு இவருடைய படம் வசூலை வாரிக் குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் ,மம்முட்டி ஆகியோரின் படங்களை விட அதிக அளவு வசூலை வாரி குவித்து ரசிகர்களை பிரமிக்க வைத்தவர் தான் நடிகை ஷகிலா. இந்தநிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இந்தியில் படமாக்கியுள்ளனர். ஷகிலா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா என்பவர் நடித்துள்ளார்.
முன்னதாக ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் போஸ்டர்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. தற்போது ஷகிலா படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி உள்ளது. வெறும் ரொமான்ஸை மட்டும் மையப்படுத்தி எடுக்காமல் ஷகிலாவின் உண்மையான வாழ்க்கையில் நடந்த கொடுமைகளையும் அவர் பட்ட கஷ்டங்களையும் இந்தப்படம் கூறியிருக்கிறது. தற்போது இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்தப்படம் தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.