சீரியல் நடிகை ரச்சிதா பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற போதே அவரது கணவர் தினேஷ் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையிலும் தினேஷ் ரச்சிதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் வெற்றி பெற வேண்டும் என தடார்ந்து பதிவிட்டு வந்தார்.
அதனால் ரச்சிதா வெளியில் வந்த பிறகு அவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ரச்சிதா தான் குழந்தையை தத்தெடுக்க போவதாக மறைமுகமாக கூறி இருந்தார். அதனால் அவர்கள் விவாகரத்து பெறுவது உறுதி என்றே கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரச்சிதா தற்போது போலீசில் தினேஷ் மீது புகார் அளித்து இருக்கிறார். தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டுகிறார் என புகார் அளித்திருக்கிறார். v
இது பற்றி போலீஸ் தினேஷிடம் விசாரித்த போது, ரச்சிதா உள்நோக்கத்தோடு இந்த புகார் அளித்து இருக்கிறார், அவர் சட்டப்படி என்னிடம் விவகாரத்து பெற்றுக்கொள்ளட்டும் என கூறிவிட்டு வந்திருக்கிறார்.
ரச்சிதாவுக்கு பதிலடி கொடுக்கத்தான் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் அவர்.