சின்னத்திரையில் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு ,இந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அந்த வகையில் தற்போது தமிழில் மூன்று பிக் பாஸ் சீசன் நிறைவடைந்துள்ளது.
தற்போது நான்காவது பிக்பாஸ் சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. தற்போது நான்காவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது அந்த வகையில் இந்த சீசனில் இறுதிச்சுற்றுக்கு சோம் சுந்தர், ஆரி பாலாஜி ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் ஒருவருக்கு மட்டுமே டைட்டில் கிடைக்கும் என்றாலும் ஒவ்வொரு நாட்களும் பிரபலங்களின் பாப்புலாரிட்டி அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இதில் இருக்கும் ஒவ்வொரு பிரபலங்களுக்கும் ஒவ்வொரு நாளும் முக்கியமான நாள் தான்.தற்போது வெளியாகி உள்ள பெண் போட்டியாளர்களின் சம்பளப் பட்டியலை பார்க்கும்போது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஏனென்றால் இந்த சீசனில் பங்கேற்ற ரேகா, சனம் ஷெட்டி, சுஜித்ரா ,அர்ச்சனா, ரம்யா பாண்டியன், சிவானி, நிஷா, சம்யுக்தா, அனிதா ஆகிய 10 பெண் போட்டியாளர்கள் சம்பளப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி
ரேகா 1,00,000, சனம் செட்டி 1,00,000, சுசித்ரா 80,000, அர்ச்சனா 75,000, ரம்யா பாண்டியன் 75,000, கேப்ரில்லா 70,000, சிவானி 60,000
,நிஷா 40,000, சம்யுக்தா 40,000, அனிதா 40,000
இதை வைத்து பார்க்கும் பொழுது பழம்பெரும் நடிகையான ரேகாவின் சம்பளமும், பெரும் சர்ச்சைக்குரிய நாயகியான சனம் ஷெட்டியின் சம்பளமும் ஒரே போன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.