நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் அழைப்பு விடுத்துள்ளார் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
நடிகர் விஜய் மட்டுமல்ல எந்த நடிகர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதன் மூலம் இளைஞர்கள் ஜனநாயகத்தை பற்றி இன்னும் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
நடிகர் விஜய்க்கு முன்பாக ஒரு நடிகர் அரசியல் வந்தார் என்றும் அடுத்த முதல்வர் நான் தான் என்று கூறியவர் இப்போது ஷூட்டிங் வருவதை போல் அரசியலுக்கு அவ்வப்போது வந்து செல்வதாக கூறி நடிகர் கமல்ஹாசனை சூசகமாக அட்டாக் செய்தார் வானதி சீனிவாசன்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமராகும் கனவு இருப்பதாகவும் ஆனால் பீகாரில் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் போடப்பட்டு அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகவும் கூறிய வானதி, அந்தப் பக்கம் போனால் நாங்க தானே இருக்கிறோம் என்றும் நீங்க கொடுத்ததை உங்களுக்கே திருப்பிக் கொடுக்கிறோம் எனவும் தெரிவித்தார். சிறு விமர்சனங்களை கூட தாங்கிக் கொள்ள முடியாத அரசாக திமுக அரசு இருப்பதாகவும் ஆனால் பிரதமர் குறித்தும் மத்திய அரசு பற்றியும் எத்தனையோ முறை ஏளனமான விமர்சனங்களை திமுகவினர் முன் வைத்திருக்கிறார்கள் எனவும் கூறினார்.