கடந்த 65 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் நடந்த விவசாயிகள் போரட்டம் கடந்த 26-ம் தேதி வன்முறையாக மாறியது. வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக் கோரி விவசாயிகள் நடந்த டிராக்டர் பேரணியில் அத்துமீறியவர்களை போலீஸ் தடுத்தது. அப்போது போலீஸார் கண்ணீர் புகை வீசியும், லத்தி சார்ஜ் நடத்தியும் விவசாயிகளை கலைக்க முயன்றனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் ஒரு விவசாயி பலியானார். 400 போலீஸார் காயமடைந்தனர். இது சம்பந்தமாக 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிஷான் மகாபஞ்சாயத் அமைப்பைச் சேர்ந்த விவசாயி ராம்பால் ஜாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் செங்கோட்டையில் விவசாயிகள் குவிந்திருந்தனர். அப்போது செங்கோட்டையில் கொடியேற்றிய நபர் குறித்த தகவல்கள் வெளியான நிலையிலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. டிராக்டர் பேரணியில் அரசு தமக்கு வேண்டிய நபர்கள் மூலம் அரசு செய்த சதிச் செயல் வெளியாகியுள்ளது” என்றார்.