மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இந்த சிறுமியை சோப்பனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதப்பன்(47) என்பவர் சிறுமியின் அறியாமையை பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி மாதப்பன், சிறுமியை அருகிலுள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
அதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் அமுதவல்லி வழக்கு பதிவு செய்து மாதப்பனை கைது செய்தார். கைதான மாதப்பன் மீது ‘போக்சோ’ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அதன் படி குற்றம்சாட்டப்பட்ட மாதப்பனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் , 2500 ரூபாய் அபராதமும், மிரட்டிய குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.