மேஷம்: மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சாதிக்கும் நாள்.சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுமையான அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.
ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை நடக்கும் நாள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி கொடுப்பிர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
மிதுனம்: மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வேலைச்சுமை மிகுந்த நாள்.சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் தாண்டி லாபம் காண்பீர்கள்.. உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை.
கடகம்: கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை கிட்டும் நாள்.பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுபடுவார்கள்.. மனைவி வழியில் நல்ல செய்தி இல்லம் தேடிவரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள்.
சிம்மம்: சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாள்.சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியத்தை சாதிப்பீர்கள். உறவினர் கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடன் நட்பு எற்ப்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களது கை ஓங்கி நிற்கும்.
கன்னி: கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை எடுப்பிர்கள். நீண்ட நாள் பிரார்த்தனை ஒன்று நிறைவேற்றுவீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும்.
துலாம்: துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிட்டும் நாள்.திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை பயக்கும் நாள்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவிர்கள். சொத்து வாங்குவது மற்றும் விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் லாபம் ரெட்டிப்பு உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள்.
தனுசு: தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாள்.குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் சந்தோஷம் அடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மத்தியில் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை ஆதரிப்பார்.
மகரம்: மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து கொடுப்பது நல்லது. சிலரின் தவறான செயல்களை எண்ணி மன வருத்தம் அடைவீர்கள். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள்.
கும்பம்: கும்ப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் எற்ப்படும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புது அறிவிப்பு வெளியிட்டு லாபம் காண்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியருடன் விவாதம் ஏற்படும்.
மீனம்:மின் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள். மதிப்புக் கூடும் நாள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை கண்டு பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.