மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இயங்கும் பாதுகாப்பு கொள்முதல் குழு (Defence Acquisition Council) ரூபாய் 28,000 கோடி மதிப்பிலான இராணுவ தளவாடங்களை வாங்குவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாக இராணுவ அமைச்சகம் ஒரு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
இராணுவ தேவைகளுக்காக வாங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஆயுதங்கள் மற்றும் இதர தளவாடங்கள் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா ஆகிய திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு சந்தையில் இருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கப்பல் படைக்கு தேவைப்படும் அடுத்த தலைமுறை ரோந்து கப்பல்கள், விமான படைக்கு தேவைப்படும் நவீன கருவிகள் மற்றும் தரை படைக்கு தேவைப்படும் நவீன ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளவாடங்கள் இவற்றில் அடங்கும்.
லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் மோதல்களுக்கு இடையே மத்திய அரசு இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வாங்குவது குறிப்பிடத்தக்கது