தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி.
இப்படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா முதல் முறையாக நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் விஜய்யிடம் இன்று காட்டியுள்ளனர்.
இதற்காக மார்க் ஆண்டனி படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சென்று சந்தித்துள்ளனர். டீசரை பார்த்துவிட்டு படக்குழுவினர் அனைவரையும் விஜய் வாழ்த்தியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஷால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..