தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் மாஸ்டர். இதற்கான புரமோஷன் சமூக வலைத்தளங்களில் அனல் பறந்து கொண்டிருக்கின்றது.
ஒரு வருடமாகியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒரு துளி கூட குறையாமல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே போகிறது. ரசிகர்களிடம் அபார எதிர்பார்ப்பு இருந்தாலும் வியாபார ரீதியாக சில பல அட்ஜஸ்ட்மெண்ட்கள் செய்ய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காரணம் முதலில் மாஸ்டர் படம் 200 கோடிக்கு வியாபாரம் ஆனால் தற்போது அனைத்து தரப்பிலும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகின்றனர். அதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் ஒரு பெரிய தொகையை விட்டுக் கொடுத்துள்ளாரா ம். ஒருவேளை பெரிய அளவு லாபம் வந்தால் மட்டும் பழைய நிலையை கொடுங்கள் எனவும் இல்லையென்றால் அடுத்தடுத்த படங்களில் நாம் சரி செய்து கொள்ளலாம் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார் .
லலித் குமார் தயாரிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றது 200 கோடியில் இருந்து தற்போது கிட்டத்தட்ட 50 முதல் 60 கோடியை குறைத்து உள்ளார்கள் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள். எப்போதுமே தயாரிப்பு தரப்பு வியாபாரம் சம்பந்தப்பட்ட விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட மாட்டார்கள் என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். மாஸ்டர் படம் வசூல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமல்லாது, கரோனாவுக்குப் பின்னர் தியேட்டர்கள் திறந்தால் மீண்டும் குடும்பம், குடும்பமாக மக்கள் வருவார்களா? என்பதை சோதித்துப் பார்க்கவே இந்த முயற்சி என கோலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது