கதிர், ஆனந்தி ஜோடி இணைந்து நடித்த பரியேறும்பெருமாள் திரைப்படம் மகத்தான வெற்றிபெற்றது. இந்தப்படத்தை இயக்குனர் ரஞ்சித் தயாரித்து இருந்தார். இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. டிராமா, த்ரில்லர் வகையை சேர்ந்த இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் லாக் காரிஸ் இயக்குகிறார். ஏஏஏஆர் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு இதுதான் முதல்படம். கதைக்களத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தொடர்ந்து தயாரிப்போம் எனத் தெரிவித்துள்ளது. பரியேறும்பெருமாளில் ஆனந்தி_கதிர் கெமிஸ்ட்ரி செமையாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. அதேபோல் இந்தப்படமும் பேசப்படும் என தயாரிப்பு தரப்பு நம்புகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த படப்பிடிப்பு ஆரம்பமாகி, ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை, மற்றும் கேரளத்தில் பெரும்பகுதி காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. இதை பிரகாசன் சகோதரர்கள் தயாரிக்கின்றனர்