சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்காக ஒருவர் இளம் பெண்களிடத்தில் உங்களுக்கு எந்த மாதிரியான பையன்களை பிடிக்கும் என்று கேள்வி கேட்டு அவர்கள் கூறும் பதிலை வீடியோ எடுத்து ஒளிபரப்பினர். அப்படி கேள்வி கேட்டபோது இளம் பெண் ஒருவர் உன்னை மாதிரி பையன்தான் பிடிக்கும் என்று கூறியதோடு அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு செல்லும் காட்சி இணையதளத்தில் வைரலானது. அந்த யூடியூப் சேனலை சேர்ந்த சிலர் பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்களிடம் கேள்வி கேட்டு பதில் கூற விருப்பமில்லாத பெண்களையும் அவர்கள் தொந்தரவு செய்ததாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றது.
மேலும் இதுகுறித்து பெசன்ட் நகரை சேர்ந்த பெண் வியாபாரி லட்சுமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சாஸ்திரிநகர் போலீசார் பெசண்ட்நகர் பீச்சுக்கு சென்று யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார், ஒளிப்பதிவாளர் அஜய் பாபு, தொகுப்பாளர் ஆசான் பாட்ஷா ஆகியோரை கைது செய்தனர். யூடியூப் சேனல்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாததால் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிக்கும் விதமாக நிகழ்வுகளை ஒளிபரப்பி வருவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக பிரபல யூடியூப் வீடியோவில் பேசிய அந்த பெண் காசு வாங்கி கொண்டு இவ்வாறு பேசியதாக தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணுக்கும் சம்மன் அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளார்கள்.