உடுமலைபேட்டையை சேர்ந்தவர் ரஞ்சித் (25) இவர் சென்னை சோழிங்கநல்லூரில் தங்கி வெப் தொடர்களை இயக்கி வருகிறார். இவரது தொடரில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுவேதா (21) என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் தன்னை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வருவதாகவும் சென்னை காவல்துறை அடையாறு துணை ஆணையரிடம் ஒரு புகார் கொடுத்தார். இது குறித்து விசாரித்த கானத்தூர் போலீசார், புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் இயக்குனர் நடிகைக்கு பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில் இயக்குனர் ரஞ்சித்தை கைது செய்தனர்