அகில பாரத இந்துமகா சபா விவசாய அணியின் மாநிலத் தலைவராக திரு.மாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக திரு.மாணிக்கம் அகில பாரத இந்துமகா சபாவில் விவசாய அணியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
இதுகுறித்து அகிலபாரத இந்துமகா சபா விவசாய அணியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் அகம் தமிழ் இணையதளத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியின் போது கூறியதாவது, என்மீது நம்பிக்கை வைத்து விவசாய அணியின் மாநிலத் தலைவராக நியமனம் செய்த அகில பாரத இந்து மகா சபாவின் தேசியத் தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ்ஜி, தேசியத் துணைத் தலைவரும், தமிழகத் தலைவருமான டாக்டர்.த.பாலசுப்பிரமணியன்ஜி ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏழை இந்துவிவசாயிகளின் பாதுகாப்பு, அவர்களை பொருளாதார அடிப்படையில் மேம்படுத்துவது, கால்நடை வளர்ப்பின் மூலம் அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்றுவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தேசிய, மாநிலத் தலைவர்களின் வழிகாட்டுதலோடு பயணிப்பேன். தமிழகத்தில் இன்று இருக்கும் தலைவர்களில் தனித்துவமானவர் த.பா.ஜி. அண்மையில் தக்கலையில் இந்து அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார் தலைவர் டாக்டர் த.பா.ஜி. உணவு அருந்தும் இடத்தில் ஒருசில தொண்டர்களுக்கு சாப்பாடு குறைவாக இருப்பதை கவனித்தவர் அவரும் சாப்பிடாமல் தொண்டர்களோடு கைகோர்த்தார். தான் என்னும் நிலையில் இருக்கும் தலைவர்களுக்கு மத்தியில் ‘நாம்’ என அனைவரையும் ஒரு குடையின் கீழ் குடும்பமாக, பாசமிகு தந்தையாக, அண்ணனாக வழிநடத்தும் தலைவர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார். அவரது ஆணைங்கிணைங்க இந்து மகா சபாவுக்கு தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் விவசாய அணியை உருவாக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறேன். தேசிய, மாநிலத் தலைவர்களின் ஆசியோடு அந்தப்பணியை முன்னெடுத்திருக்கிறேன்.
ஏழை இந்து விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கச் செய்வது, கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து ஏழை இந்து விவசாயிகளை பொருளாதார அடிப்படையில் மேம்படுத்துவது, ஏழை இந்து விவசாயிகளில் நலிவுற்றோரை தேர்வுசெய்து அவர்களை விற்பன்னர்களாக உயர்த்துவது ஆகிய நோக்கத்தில் செயல்படுவேன்.’’என்றார் அவர்.