தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது.
இந்த ஆணையை அதிகாரி அருணா ஜெகதீசன் மாதந்தோறும் தூத்துக்குடியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.அதன்படி ஏற்கனவே 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ,போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ,போராட்டத்தை முன்னெடுத்த ,முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள் ,பத்திரிக்கையாளர்கள், அரசு அலுவலர்கள் என 586 பேரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 275 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருபத்தி நான்காவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த விசாரணையில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்த், அரசு ஆஸ்பத்திரி டீன், கலவரத்தின்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட மொத்தம் 56 க்கும் மேற்பட்டவர்களை சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் வந்து கலந்து கொண்டனர். அவர்களின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆணையம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,இந்த சம்மனை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டுள்ளார் இதனால் அவரை நேரில் ஆஜராவாரா? அல்லது வக்கீல் மூலம் தாக்கல் செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்