சிறைச்சாலை என்றாலே நினைவிற்கு வருவது காட்டுத்தனமான தாக்குதல் சித்திரவதைகள் தான். ஆரோக்கியமற்ற உணவு மற்றும் சுகாதாரமற்ற சூழலும் நம்மூரு சிறைச்சாலையின் அடையாளம். ஆனால் இது நமது இந்திய சிறைச்சாலைகளின் நிலை மட்டும்தான். ஆனால் எல்லா சிறைச்சாலைகளும் அப்படியானது அல்ல. அது நம் கற்பனைக்கு முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறது.
உலகின் சில விசித்திரமான மற்றும் ஆடம்பரமான சிறைகளை காண்போம் வாருங்கள்
பாஸ்டாய் சிறை, நார்வே
அழகான வசிப்பிடங்கள், பசுமையான பண்ணைகள் என இருக்கும் இந்த சிறைச்சாலையில் 100 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர், அவர்கள் சிறை வளாகத்திற்குள், டென்னிஸ், குதிரை சவாரி, மீன்பிடித்தல் மற்றும் சன் பாத் போன்ற ஆடம்பரங்களை அனுபவிக்கின்றனர்.

ஒடாகோ கரெக்சன்ஸ், நியூசிலாந்து
ஓடாகோ சிறை தனது கைதிகளுக்கு வசதியான ஆடம்பரமான அறைகளை வழங்குகிறது, மேலும் திறனை வளர்ப்பதன் மூலம் அவர்களை மாற்றுவதற்கு பெரும் முக்கியத்துவத்தை அளிக்கிறது. .
ஜஸ்டிஸ் சென்டர் லியோபன், ஆஸ்திரியா
குற்றவாளிகளுகென ஒரு வினோதமான ஐரோப்பிய குடியிருப்பு, தான் இந்த ஜஸ்டிஸ் சென்டர் சிறைச்சாலை. அதன் ஒவ்வொரு கைதிகளுக்கும் ஒரு தனி குளியலறை, சமையலறை மற்றும் ஒரு தொலைக்காட்சியைக் கொடுக்கிறது.

அரஞ்சுவேஸ் சிறைச்சாலை, ஸ்பெயின்
திருத்துவதற்காக சிறையில் அடைக்கும் கைதிகளின் குடும்பங்களை அவர்களிடம் இருந்து பிரிப்பதை உணர்ந்த இந்த சிறைச்சாலை குழந்தைகளுக்கு சிறைவாசம் அனுபவித்த பெற்றோருடன் முதல் வருடங்கள் வாழ உதவுகிறது. சிறைச்சாலைகள், சுவர்களில் டிஸ்னி கதாபாத்திரங்கள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டுப் பகுதி ஆகியவற்றையும் தனக்குள் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.ஏ ஃபுல்ஸ்பூட்டல் சிறைச்சாலை, ஜெர்மனி
ஜெர்மனி யின் ஹாம்பர்க் சிறைச்சாலையில் பல நீண்ட காலமாக பல கைதிகள் உள்ளனர், அவர்கள் படுக்கைகள், ஒரு கவுச் மற்றும் ஒரு தனி குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றைக் கொண்ட விசாலமான வெளிச்சத்தை அனுபவிக்கிறார்கள்.

செபு சிறை, பிலிப்பைன்ஸ்
செபு சிறைச்சாலை மற்ற சிறைச்சாலைகளைப் போல ஆடம்பர தலங்களுடன் பொருந்தவில்லை. ஆனாலும் கைதிகளின் பொழுதுபோக்கு மற்றும் படைப்பாற்றலுக்கான வசதிகளை கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல இங்கே கைதிகள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் மக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்புறம் என்னப்பா உள்ள ஒரு ரவுண்டு பொய்ட்டு வரலாமா.…?
நா ஜெயிலுக்கு போறேன்!………ஜெயிலுக்கு போறேன்