அமெரிக்க அதிபர் தேர்தலில் 306 இடங்களில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் 232 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றார். இதற்கிடையே கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளையும் ஜோ பைடன் பெற்றதால் அமெரிக்காவின் 46-வது அதிபர் ஆகுவதற்கான நடவடிக்கைகள் நடந்துவருகின்றன. ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வெள்ளை மாகிகை நோக்கிச் சென்றுள்ளனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். போராட்டகாரர்கள் கலைந்துசெல்ல மறுத்ததால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தலைநகரில் நிகழும் குழப்பத்திற்கு யாரையும் நான் காரணமாக கூறவில்லை. நாம் பார்ப்பது சட்டவிரோதத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான விரோதிகள். இது கருத்து வேறுபாடு அல்ல, இது கோளாறு. தேசத்துரோகத்தின் எல்லை. இப்போது அது கண்டிப்பாக முடிவடைய வேண்டும்” என கருத்து பதிந்துள்ளார். அதே சமயம் தனது ஆதரவாளர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்