நம்நாட்டில் விவசாயிகளின் பிரச்சினை ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைகள் எல்லாம் சரி செய்யும் விதமாக மத்திய அரசு வேளாண் திட்டங்களை கொண்டு வந்தது. இருப்பினும் அந்த சட்டங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தக் கோரி விவசாய சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் வெயில், மழை பார்க்காமல் போராட்டத்தில் இருக்கின்றனர் விவசாயிகள்.
அரசு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், விவசாய போராட்டங்களுக்கு எதிரான மற்றும் விவசாய சட்டங்களுக்கு எதிரான இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டா தலைமையிலான அமர்வில் விசாரணை நடக்க உள்ளது. இந்த விசாரணையில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளைப் பொறுத்து அடுத்த கட்டமாக அரசு சார்பில் என்ன முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது என்பது குறித்து தெரியவரும்.