உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் இந்தியாவில் பல பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருகின்றது.
அதிலும் இமாச்சல பிரதேசத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்து சுமார் ஆயிரத்து அறுநூறு பறவைகள் உயிரிழந்துள்ளது .அத்தோடு ராஜஸ்தானில் காகம் மற்றும் மயில்கள் உயிர் இழந்து வருகின்றது. இதற்கு பறவை காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதோடு தென்னிந்தியாவிலுள்ள கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா போன்ற பகுதிகளில் உள்ள 12,500 வாழ்த்துக்கள் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் சுற்றியுள்ள சுமார் 36 ஆயிரம் வாத்துகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. என்னதான் பறவகைகள் வாத்துக்களை பாதித்திருந்தாலும் இன்னும் மனிதர்களுக்கு எவ்வித தொற்றும் ஏற்பட வில்லை இப்போது இந்த பறவை காய்ச்சல் குறித்து பலரது மனதில் எழும் சில கேள்விகளும் அதற்கான விடைகளையும் பற்றி காண்போம்

பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
பறவைக்காய்ச்சல் வைரஸ்கள் பொதுவாக மனிதர்களை பாதிக்காது 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக பறவை காய்ச்சல் வைரஸ் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பறவைகளில் பறவைக்காய்ச்சல் எவ்வாறு பரப்பப்படுகின்றது?
பொதுவாக பாதிக்கப்பட்ட பறவைகளின் உமிழ்நீர் சுரப்பு மற்றும் மலம் ஆகியவற்றில் காய்ச்சல் வைரஸ்கள் பரவியிருக்கும். எப்போது இந்த அசுத்தமான வெளியேற்றம் களுடன் ஆரோக்கியமான பறவைகள் தோன்றுகிறதோ அப்போது அந்த பறவைகளும் பறவைக்காய்ச்சல் பாதிக்கப்படுகின்றது.

மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் எப்படி பரவுகிறது?
பெரும்பாலான சமயங்களில் மனிதர்களிடம் பறவை காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது பாதிக்கப்பட்ட கோழி அல்லது அசுத்தமான கோழிகளை நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்கப்படுகின்றது.