நடிகர் விஜய் நடிப்பில் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர். இந்தப் படத்தை திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் ரசிகர்களை அனுமதிக்குமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார் தளபதிவிஜய் .இதற்கு முதலில் அனுமதி அளிக்காமல் இருந்த முதல்வர் திரையரங்கில் 100 சதவீதம் இருக்கைகளுடன் ரசிகர்கள் படத்தை தியேட்டரில் பார்க்கலாம் என அறிவித்துள்ளார்.
இதனால் தற்போது தளபதி ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர் இந்நிலையில் நடிகர் விஜய் 100 சதவீத இருக்கைகளுடன் ரசிகர்களை அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் விஜய் ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்ப்பாரா என சோசியல் மீடியாக்களில் விவாதம் போய்க்கொண்டு இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவர். இதனால் தியேட்டரில் தனது ரசிகர்களுடன் விஜய் படம் பார்ப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகின்றது அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் விஜய்யின் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு மிக ஆர்வமாக உள்ளார்கள்.
விஜய் தியேட்டர்க்கு வந்து படம் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எது எப்படியோ விஜய் ரசிகர்களுக்கு தற்போது பொங்கல் அன்று பெரிய விருந்து ஒன்று காத்திருக்கிறது