மேற்கு வங்க பாஜக எம்பி சவுமித்ர கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான், திரிணாமுல் காங்கிரஸில் கட்சியில் இணைந்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிஷன்பூர் மக்களவை தொகுதி எம்பி சவுமித்ர கான் கடந்த ஜனவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அவரது மனைவி சுஜாதா மொண்டல் கான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். எனக்கு பிடித்தமான தீதியுடன் (அக்காவுடன்) பணியாற்ற விரும்புகிறேன் எனவே நான் திரிணாமுல் கட்சியில் இணைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்