பா.ஜ.க முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்டாலினையே வேல் தூக்க வைத்த முருகப் பெருமானின் சக்தி அற்புதம். தமிழகத்தில் முருகனின் புரட்சி ஆரம்பமாகியுள்ளது. பக்தர்கள் தைப்பூசத்திற்குப் பழனிக்குச் சென்று, திருநீறு பூசினால் மட்டும் போதாது. முருகனை இழிவுபடுத்தும் கருப்பர் கூட்டத்திற்கு உதவி செய்யும் ஸ்டாலினையும், தி.மு.க-வையும் ஒரு சீட் கூட ஜெயிக்கவிடக் கூடாது.
மு.க.ஸ்டாலின் இஸ்லாமியர் திருமணத்திற்கு சென்று இந்துக்களின் சடங்குகளை கேலி செய்து பேசி வருகிறார். டில்லி கலவரத்தில் உண்மையான விவசாயிகள் பங்கேற்கவில்லை. டில்லியில் நடந்த கலவரத்தை ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் அழகிரியும் கண்டிக்காதது ஏன்? தேர்தலில் தி.மு.க-வை தண்டிக்க வேண்டும் என இந்துக்கள் சபதம் எடுக்க வேண்டும்” என்றார்.