ஆஸ்திரேலியாவுக்கு சென்று இந்திய கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. இதில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியும் ,இரண்டாவது நடந்த டெஸ்டில் இந்திய அணியும் வெற்றிபெற்று தற்போது சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணி மோதும் 3வது டெஸ்ட் போட்டி வருகிற 7ஆம் தேதி தொடங்க உள்ளது இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிரமாக பயிற்சி பெற்று வந்தனர் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா திரும்பி உள்ளதால் அகர்வால் கழற்றிவிடப்பட்டார்.அவருக்கு பதிலாக தாகூர் அல்லது நவ்தீப் சைனி இடம்பெறுவர். தொடரில் முன்னிலை வகிக்க போவது யார் என்பதை வருகிற இந்த மூன்றாவது போட்டி தான் முடிவு செய்யும் இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு இந்த டெஸ்ட் தொடங்குகிறது.