தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனது 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரபல சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தபடத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற படங்களை இயக்கிய இளம் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கவுள்ளார்.
தளபதி 65 படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் குமார் தான் தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தளபதி 66 படத்தை வலிமை பட இயக்குனர் எச். வினோத் இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதலில் தளபதி 66 படத்தை இயக்க சிறுத்தை சிவாவிடம் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தpபட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அவரால் முடியாத நிலையில் தற்போது எச். வினோத்தை சிறுத்தை சிவா சிபாரிசு செய்தாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் சில தரப்பில் இருந்து தளபதி 66 படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது தளபதி விஜய் 66 படத்தை யார் இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது