வாட்ஸ் அப் இன்று மிக முக்கியமான பொழுதுபோக்குத்தளம் ஆகியிருக்கிறது. ஜாலியான விசயங்கள் தொடங்கி குடும்ப உறவுகளின் சங்கமம் வரை குழு அமைத்து வாட்ஸ் அப் விவாதம் செய்துவருகின்றனர். இந்நிலையில் பலரது போன்களில் இந்த வாட்ஸ் அப் நாளை முதல் மாயமாகிவிடும். அதாவது செயல்பட முடியாமல் போகும்.

நாளை முதல்(ஜனவரி 1) குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஓஎஸ் 4.0.3, புதிய ஐபோன் ஐ.ஓ.எஸ் 9, மேற்றும் கேஏஐஓஎஸ் 2.5.1, ஜியோ போன், ஜியோ போன் 2 உள்ளிட்ட செல்போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தமுடியும். இவர்கள் வாட்ஸ் அப்பை இன்ஸ்டால் செய்து மொபைல் நம்பர் சேர்க்க வேண்டும்.
இதேபோல் ஐஓஎஸ் 9 என்ற மென்பொருள் இல்லாத செல்போன்களில் இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. அதேநேரம் ஐபோன் 4,5,6, 6 எஸ் ஆகிய போன்களில் அப்டேட் செய்து பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.