தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் யாஷ். தற்போது கதை நன்றாக இருந்துவிட்டால் மொழி ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை மக்கள் மாற்று மொழிப் படங்களையும் தற்போது ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் அதிலும் இந்த கொரோனா லாக்டவுன் காலங்களில் தமிழ் மக்கள் மற்ற மொழி படங்களை அதிகம் பார்த்து ரசித்தனர்.
அப்படி கன்னட படமாக்கிய கே.ஜி.எஃப் முதலில் கன்னடத்தில் வெளியாகி அதன்பின் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி படமாக மாறும் என்று படக்குழு எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகிவருகிறது இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக அந்த படத்தில் நடித்த கதாநாயகன் யாஷ் ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.