விவசாயமும் கிராமங்களும் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என நம் தேசத்தந்தை காந்தியடிகள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் இன்றோ சோறு போட்ட உழவர்களை கூறுபோட்டு பந்தாடி கொண்டு இருக்கிறது இவ்வுலகம்.

நாம் தினமும் உண்ண தேவையான உணவை விளைவிப்பவர்கள் இப்பொழுது விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.ஆம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என்றும், தினமும் ஒரு விவசாயி என 100 விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி உள்ளார்கள் என்பதும் அவர்களின் போராட்டம் எந்த நிலை வரை சென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எலிக்கறி சாப்பாடு, நிர்வாணப் போராட்டம் என டெல்லியை உலுக்கிய அய்யாக்கண்ணுவின் இந்த திடீர் தற்கொலைப் போராட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.