இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே என்று அழைக்கப்படும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 192 ரன்களை எடுத்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 221 ரன்கள் எடுத்திருந்தது. மழை பெய்த காரணத்தினால் அந்த நாள் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. 104 ரன்களுடனும் ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் ரஹானே ரன் அவுட் செய்யப்பட்டார் அதனை அடுத்து இந்திய அணி விக்கெட்டுகள் மடமடவென சரிய தொடங்கியது அதிகபட்சமாக ஜடேஜா 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 115 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 376 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணி தற்போது 130 ரன்கள் முன்னிலை வகிக்கின்றது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக நாதன் லயன் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். கம்மின்ஸ் 2 விக்கெட் கைப்பற்றியுள்ளார் இதனை தொடர்ந்து களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் அவுட் செய்யப்பட்டார்.