மனித உடலின் இயக்கச் செயல்பாடுகள் அத்தனைக்கும் உத்தரவு கொடுக்கும் உறுப்புதான் மூளை. அது மட்டும் இயங்காமலோ, சரிவர உத்தரவை கடத்தாமலோ விட்டுவிட்டால் நம் உடலுக்குள் தகவ பரிமாற்றம் என்பதே இல்லாமல் ஸ்தம்பித்துப் போகும். ஆனால் சிக்கலான மூளை ஆப்ரேசனின் போதும் ஒரு பெண் கீதையின் வசனங்களை சொன்னது நெகிழவைத்துள்ளது.
மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிட்சை எடுத்துக்கொள்ள பெண் ஒருவர் அகமதாபாத்தில் இருக்கும் ஒரு பெரிய மருத்துவமனைக்குப் போனார். அவருக்கு அனிசீசியா எனப்படும் மயக்க மருந்து கொடுத்து அவர் மூளையில் மருத்துவர்கள் ஆப்ரேசன் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அப்போது வழக்கமாக பயந்திலோ, சோர்விலோ இரண்டும் இல்லாத போது மயக்கவியல் மருந்தின் சக்தியினாலோ நோயாளி மயங்கிவிடுவது தான் வழக்கம். ஆனால் குறித்த நோயாளி மயக்கம் கொள்ளவில்லை. மருத்துவர்களுக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இந்த ஆச்சர்யம் அடங்குவதற்குள் அடுத்ததாக, அந்த பெண் தனக்கு ஆப்ரேசன் நடந்து கொண்டிருந்த போதே பகவத் கீதையை குஜராத்தி மொழியில் வாய்விட்டு உச்சரிக்கத் துவங்கினார். அதை அங்கு சிகிட்சையளித்த மருத்துவக்குழுவில் இருந்த மருத்துவர் ஒருவர் வீடியோ எடுத்து போட, இப்போது அது வைரலாகிவருகிறது.
અમદાવાદઃ ચાલુ મગજના ઓપરેશનમાં દર્દીએ કર્યું ગીતાના શ્લોકનું પઠન pic.twitter.com/M2TKda4Iea
— News18Gujarati (@News18Guj) December 31, 2020