நானும் ரவுடிதான் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாராவுக்கும், அந்தபடத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது அனைவருக்கும் தெரிந் த விசயம்தான். அதன்பின் இருவரும் பொதுவெளியிலும், திரைப்பட விழாக்களிலும் காதலர்களாக ஜோடியாகவே வலம்வரத் தொடங்கினர்.

மேலும், அவ்வப்போது இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நேற்று காதலன் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கின்றது.
இதில் நயனின் கையை விக்னேஷ்சிவன் பிடித்திருக்க நயன் ரொமாண்டிக் லுக் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் செமையாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்