தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தளபதி விஜய். தளபதி உடைய ஒவ்வொரு படத்தையும் அவரது ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர்.
தற்போது இவருடைய மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் அதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தளபதி 65 வது படத்தை இயக்குனர் செந்தில்குமார் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை.
இணையதளத்தில் தளபதி 65 ஆவது படத்தின் பெயர் டார்கெட் ராஜா இன்று வெளியாகி வைரல் ஆனது .2021 தீபாவளிக்கு இந்தப்படம் ரீலாசிகிறதாம். அதேபோல் இந்த படத்தின் இயக்குனரான நெல்சன் ஏற்கனவே நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து வித்தியாசமான கோணத்தில் செம கெத்தா திரைப்படம் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் ?என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. விரைவில் தளபதி65 படத்திற்கான தலைப்பு தேர்வு செய்யப்பட்டு கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக தளபதி 65 ஆவது திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஒருவேளை தீபாவளிக்கு தளபதி 65 ரிலீசானால் இந்த தீபாவளி தளபதி தீபாவளிதான் போங்க!