தமிழகத்தில் மக்களுக்கு பிடித்த சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி அதிக ரசிகர்களைக் கவர்ந்த தொலைக்காட்சி என்றே விஜய்டிவியை சொல்லலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் ,சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி, ஈரமான ரோஜாவே ஆகிய தொடர்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சீரியலும் வெற்றியடைந்த பின்னர் அந்த சீரியலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களை எடுத்து ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு ஒளிபரப்பிக் கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அதேபோல் ராஜா ராணி தொடரும் இரண்டாம் பாகம் தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் வேலம்மாள் என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌனராகம் என்கிற தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவர் தான் குழந்தை நடிகை கிருத்திகா. இந்த சீரியல் 850 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது மௌனராகம் சீரியலில் நடித்த குழந்தை நடிகை கிருத்திகா, வேலம்மாள் என்கிற தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
மேலும் இந்த தொடர்குறித்த புரோமோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதேபோல் அந்த புரோமோவை பார்க்கும் போது அந்த சீரியலும் அப்பா-மகள் செண்டிமெண்ட் கதை தான் எனத் தெரியவருகிறது எனவே இதை பார்த்து பலரும் இதுலயும் அதே கதையா? என்று விஜய் டிவியை கலாய்த்து வருகின்றனர் இதோ அந்த ப்ரோமோ உங்களுக்காக..