தன் ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படுபவர் அஜித்குமார். ஆசைநாயகன், அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் ஆரம்ப கட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அஜித் தீனா படத்தில் நடித்த பின்பு ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டார்.
தமிழ்த் திரைப்பட நடிகர்களிலேயே அதிக அளவு ரசிகர்கள் பலம் கொண்டவர் அஜித் குமார் தான். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தோடு மோதிய இவரது விஸ்வாசம் மகா,மெகா ஹிட் ஆனதோடு. வசூலிலும் சாதனை படைத்தது. இப்போது வலிமை சூட்டிங் ஊரடங்கால் முடங்கியுள்ளது. கரோனா நிவாரண நிதிக்கு ஒருகோடியே 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருந்தார் அஜித்.
திரையுலப் பிண்ணனியே இல்லாமல் தன் சொந்த உழைப்பினால் இப்போது இருக்கும் இந்த இடத்தை எட்டியிருக்கிறார் நடிகர் அஜித். என்னதான் உயரத்தில் இருந்தாலும் அஜித்தின் அழகே அவரது சிம்பிளி சிட்டி தான்.
தல அஜித் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் குடும்பம் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வலிமை படத்தில் தல அஜித்தின் தோற்றம் இது தானா என கமெண்ட் செய்து வருகின்றனர்.