கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் அதிக இடங்களில் வென்றது. இதில் திருவனந்தபுரம் மேயராக கல்லூரி மாணவிக்கு வாய்ப்பு கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை மார்க்ஸிஸ்ட் கைப்பற்றியது. இந்நிலையில் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்துவந்த ஆர்யாவுக்கு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மார்க்ஸிஸ்ட் வாய்ப்பு கொடுத்து அவரும் வெற்றிபெற்று இருந்தார். இந்நிலையில் 21 வயதே ஆன ஆர்யாவுக்கு மேயர் வாய்ப்பை கொடுத்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது கேரளம். கல்லூரி மாணவி ஒரு மாநகராட்சியின் மேயராக பொறுப்பு வகிக்க இருப்பது இதுவே முதல்முறை. மாணவி ஆர்யா இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராக உள்ளார்.
கட்சியின் குழந்தைகள் அமைப்பான பால சங்கத்திலும் பொறுப்பு வகித்தார் ஆர்யா. இவருக்கு இப்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.