பாட்டிமார்கள் குழந்தையை குளிப்பாட்ட தனது கால் முட்டிகளுக்குள் குழந்தையின் மென்மையான தலையை வைத்து குளிப்பாட்டுவார்கள். ஆனால் இன்றைய இளம் பெண்களுக்கு அதெல்லாம் தெரிவதில்லை. அதனால் தான் பக்கத்து வீட்டு பாட்டிகளைத் தேடி ஓடுகிறார்கள்.

இதோ இந்தப் பதிவில் பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டும் நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்வோம். ‘’குழந்தைகளை வெப்பமான நாட்களில் காலை 9-10 மணிக்குள் குளிப்பாட்டலாம். மேலும் குளிர் நாட்கள், குளிர் பிரதேசங்களில் உள்ள குழந்தைகளை வெயில் வந்த பிறகு குளிக்க வைக்கலாம்.
அதேபோல் குழந்தையைக் குளிப்பாட்டும் முன்னர் ஒருபோதும் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. ஆனால் குழந்தை குளிக்க வைத்த பிறகு பால் கொடுத்து தூங்க வைக்கலாம்.
அதேபோல் குழந்தையை தினமும் குளிப்பாட்டுவது ஒரு நல்ல பழக்கம் என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தை பிறந்தவுடன் நாட்கள் செல்ல செல்ல அதன் இளந்தோலானது உரிந்து புதிய தோல் உருபெறும். எனவே அதற்கு தினமும் குளிக்க வைத்து சுத்தமாக வைத்துக்கொண்டாலே குழந்தைக்கு ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது.

குழந்தை மீது எண்ணெயை தடவ செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் போன்ற இயற்கை முறைகளை பயன்படுத்தலாம். அதேபோல் பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். எந்த எண்ணெயாக இருந்தாலும் அதைக் சூடாக்கி குழந்தையின் உடல் பொறுக்கும் இளஞ்சூட்டில் தேய்த்து மசாஜ் செய்து கொடுங்கள்.
தண்ணீரும்கூட சூடாக இல்லாமல் குழந்தையின் உடல் பொறுக்கும் இளஞ்சூடாக இருப்பது அவசியம்