மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் போராட்டமான நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது மிகவும் நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் ஆபத்தில் மாட்டிக்கொள்வீர்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து வந்து போகும். மனைவிவழியில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். கல்யாண பேச்சு முடிவுக்கு வரும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்றுமதத்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களை சந்திப்பீர்க.ள் உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை பாராட்டுவார்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தொட்டதை வெற்றி காணும் நாள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். அரசால் அனுகூலம் கூடும். பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி பற்றி சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாள். முக்கிய பிரமுகர்களை சந்திக்க நேரிடும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். பழைய நண்பர்களை சந்தித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாள். திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக உங்களுக்கு இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் சண்டையிட நேரிடும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு கவனம் தேவைப்படும் நாள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் மனதில் உண்டாகும். வாகனம் அடிக்கடி பிரச்சினை பண்ணும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போடவேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள். குடும்பத்தில் உள்ளவர்கள் உணர்வுகளை உணர்ந்து நடப்பீர்கள். பழைய கடன்களை அடைப்பதற்காக புதிய கடன் வாங்குவீர்கள். நம்பிக்கை உடையவர்களை சந்தித்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கை ஓங்கி நிற்கும்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாள். கடந்த கால இனிய அனுபவங்களை நினைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வாகனம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் விஐபி வாடிக்கையாளர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திட்டங்கள் நிறைவேறும் நாள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியம் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய நண்பர்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வீடு,வாகனம் வாங்குவதைப் பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை பாராட்டுவார்.