மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சாதிக்கும் நாள். அனுபவபூர்வமாக பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரம் விருத்தியாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். மேலதிகாரி உங்களை கூப்பிட்டு பாராட்டுவார்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று மன வருத்தம் அடைய வேண்டாம். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் மூலம் பிரச்சனைகள் ஏற்படும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாள். உங்கள் பலத்தை உணர்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக எடுத்து வந்த வழக்கு நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுடைய நெருக்கமாக பழகுவார்கள். பழைய சரக்குகளை விற்று லாபம் காண்பீர்கள். வியாபாரத்தில் உங்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். உத்யோகத்தில் அதிகாரி உங்களைப் பாராட்டுவார்.

கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு முயற்சியால் முன்னேற்றம் அடையும் நாள். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். பிள்ளைகளின் கல்வியை பற்றி யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனை ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உயர்வு பெறும் நாள். எதிர்பார்ப்புகள் தள்ளிப்போகும். எதிர்பாராத ஒரு வேளை முடிவுக்கு வரும் .புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இரட்டிப்பு லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று முன்னேற்றமடையும் நாள். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பதன் மூலம் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் நஷ்டம் ஏற்படலாம். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாள். கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதன் மூலம் லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் உண்டு.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைகள் சந்திக்க நேரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவதிப்படுவீர்கள் உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் காண்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் நெருக்கமாக பழகுவீர்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கௌரவம் கூடும் நாள்.எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பெற்றோர்கள் பக்கபலமாக இருந்து ஆதரிப்பார்கள். வெளிவட்டாரத்தில் நட்பு விரிவடையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள் உத்தியோகத்தில் தங்களுடைய கை ஓங்கி நிற்கும்