- மேஷம்
- மேஷ ராசி நேயர்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும் நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் திருமண முயற்சிகள் கைகூடும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- ரிஷபம்
- ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று உறவினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் செலவுகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள். உடல்நிலையில் அதிக கவனம் தேவை. உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
- மிதுனம்
- மிதுன ராசி நேயர்களுக்கு ஆன்மிக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் சந்தோஷம் அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்துசேரும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒருசிலருக்கு புதிய வாகனம் வாங்க யோகம் உண்டாகும்.
- கடகம்
- கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உறவினர் வருகையால் சந்தோஷம் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் தீரும்.
- சிம்மம்
- சிம்ம ராசி நேயர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் நாள். பூர்வீக சொத்துக்களை தனது பலன் உண்டாகும் உங்களுடைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும் உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
- கன்னி
- கன்னி ராசி நேயர்களுக்கு பணம் வரவு அதிகமாக இருக்கும் சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் முயற்சி காட்டுவீர்கள் வியாபாரத்தில் லாபமும் உண்டாகும் குடும்பத்தில் அமைதி நிலவும்
- துலாம்
- துலாம் ராசி நேயர்களுக்கு இந்த குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் சுப செலவுக்காக கையிருப்பு குறையும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது மூலம் பணப்பிரச்சினைகள் தீரும்.
- விருச்சிகம்
- விருச்சக ராசி நேயர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை
- தனுசு
- தனுசு ராசி நேயர்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்துப் பிரச்சினைகள் அகலும் வேலையில் பளு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமாக வாங்கிய கடன் எளிதில் கிடைக்கும்.
- மகரம்
- மகர ராசி நேயர்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கஷ்டங்கள் குறையும் .தொழிலில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள் பணவரவு அதிகரிக்கும்.
- கும்பம்
- கும்பராசி நேயர்களுக்கு இன்று உங்களுக்கு மன குழப்பம் ஏற்படும் நாள். குடும்பத்தினருடன் ஒற்றுமை குறையும் நாள். வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை .உற்றார் உறவினர்கள் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் குறையும்.
- மீனம்
- மீன ராசி நேயர்களுக்கு உடல் நிலையில் சோர்வு ஏற்படும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் பாதியில் தடைப்படும் வழி பயணங்களில் கவனம் தேவை உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.