தின ராசி பலன்கள்
அனைத்து ராசிக்காரர்களுக்குமான
இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே நீங்கள் உத்தியோகத்தில் இருக்கிரீர்களா உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் அனுகூலமான பலன்கள் கிட்டும். மேலும் நீங்கள் நினைத்த விஷயங்கள் எல்லாம் நடக்குமா என்பதில் கொஞ்சம் குழப்பங்களே நீடிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மலரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் காணப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே நீங்கள்
இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டும் ஆனாலும் பயப்படும் அளவிற்கு பெரிதாக பிரச்சனைகள் இருக்காது.மேலும் குடும்பத்தில் அமைதி நிலவ வாக்குவாதங்களை தவிர்ப்பது மிக நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிறைய நன்மைகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் அமோக வெற்றி கிட்டும். இல்லத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் அதை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான மனநிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு தான்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவை பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியான தொந்தரவுகள் சந்திக்க வாய்ப்ப இருபபதால் பயப்பட வேண்டாம் கொஞ்சம் எச்சரிக்கை தேவை அவ்வளவு தான்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் யாவும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருப்பவர்களுக்கு இன்று வீண் அலைச்சல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவார்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் அவசியம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் கவனம் மற்றும் எச்சரிக்கைகள் தேவை. வாகன வீதியான பயணங்களில் கவனம் அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணரீதியான விஷயத்தில் அடுத்தவர்களை நம்பாமல் இருப்பது மிக்க நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவிற்கு ஆளாவார்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் நீங்கள் ஆதாயம் பெறவீர்.
துலாம்
துலாம் மக்களே
இன்றைய நாளில் உங்களுக்கு நிதானம் அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகளை தவிருங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உங்களை அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவர். புதிய முயற்சிகளில் அமோக வெற்றி தான் உங்களுக்கு. ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு இன்றைய நாளில் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த விஷயங்கள் யாவும் முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
உற்றார் உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்களைப் நீங்கள் பெறுவீர்கள். மேலும் இன்றைய நாளில் மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சில தொந்தரவுகள் இருந்தாலும் வீண் விரயங்கள் இருக்காது. பெண்கள் யாவரும் இறை வழிபாடுகளில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீடிக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலையே காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் நல்லது. அரசு வழி காரியங்கள் யாவும் அனுகூல பலன்கள் தரும். ஒரு சிலருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய ஒரு ராசியான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர நீங்கள் வழிவகுப்பீர்கள். வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையக்கூடிய வேலை வாய்ப்புகள் உண்டு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான விஷயத்தில் சுபச் செய்திகள் வந்து சேரும். இல்லத்தில் மகிழ்ச்சி கரமான சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்வீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உங்களை அடையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் கவலையும் அதிகமாகவே காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருககும் ராசிக்காரர்களுககு போட்டியாளர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
இன்றைய ராசி பலன்களால் அனைவருக்கும் இன்றைய நாள் இனிதாய் இருக்க வாழ்த்துக்கள்