மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் பல பிரச்சனைகளில் இருந்து விடுபட கூடிய நாள்.வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தர்ம காரியங்கள் செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்.வீண் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் கவனத்தோடு செயல் படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகளை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று பண வரவு அதிகரிக்கும் நாள்.உறவினர் வருகையால் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பழைய நண்பர்கள் சந்திப்பு அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் பூர்வீக சொத்து வழியில் அனுகூலம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு நெருங்கியவர்களால் மனநிம்மதி குறைய வாய்புள்ளது வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட மனைவிவழி உறவினர்களால் உதவிகள் உண்டாகும். வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் அகலும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு மனக் குழப்பம் ஏற்படும். உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதையும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.சுப முயற்சிகளை தள்ளி வைப்பது மிகவும் நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தாள் உங்களுடைய பிரச்சனைகள் குறையும்.உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.
விருச்சகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். திருமண பேச்சுவார்த்தைகள் இருந்த தடைகள் விலகும்.பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வத்திற்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது

தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடையும் நாள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரம் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு உடன்பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.திருமண சுப காரியங்கள் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் ஏற்படும்.தேவைகள் பூர்த்தி ஆகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும் வியாபாரத்தில் எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
கும்பம்
இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளால் மனநிம்மதி ஏற்படும் பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது திருமண முயற்சிகளில் சில தடங்கல்கள் மற்றும் பின் முன்னேற்றம் ஏற்படும் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து செல்வது நல்லது.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்று ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். பண வரவு அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.