மேஷம்
மேஷ ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு சாதகமற்ற நாளாக அமையும்.எந்த ஒரு காரியத்திலும் நிதானம் தேவை கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் வரும் சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தாழ்வு கொண்ட நாடாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தாமதம் ஏற்படலாம். திருமணம் போன்ற சுபகாரியங்கள் காரணமாக உங்களுக்கு அலைச்சல் ஏற்படும் .உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை ஏற்படும் சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும்.சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே பரஸ்பரம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் ஈடுபடுவதால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். விட்டுக்கொடுத்து செல்வது உங்களுக்கு நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்வீர்கள் சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த வகையில் பணவரவு அதிகமாக இருக்கும். நண்பர்கள் மூலம் மனம் மகிழும் செய்திகள் கேள்வி படுவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லைகள் இன்று முதல் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும் சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் அலைச்சல்களும் வீண் விரயங்களும் ஏற்படும்.தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள். தொட்டதெல்லாம் வெற்றியாக அமையும் நீங்கள் எதிர்பார்க்கும் சுபகாரிய நிகழ்வுகள் விரைவில் கைகூடும்.பூர்வீகச் சொத்துக்களை வாங்கும் பலன் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
விருச்சகம்
விருச்சக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த நாளாக இருக்கும்.இதுவரை கவலையாக இருந்த விஷயங்கள் இன்று நீங்கி மனத்தெளிவு பிறக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நீண்ட பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
தனுஷ்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகளை இன்று எடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணரீதியான விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சி எல்லாமே வெற்றி கிடைக்கும் நாள். வாகன ரீதியான பயணங்களை மிக எச்சரிக்கையாகஇருப்பது நல்லது. தியாகத்தில் இருப்பவர்கள் புதிய நண்பர்களை சந்திக்க வாய்ப்புக்கள் கிடைக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டிய நபரை இன்று சந்திப்பீர்கள்.அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும் .உத்தியோகத்தில் யாரிடமும் பேசாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நாணயத்துடன் நடந்து கொள்வது உங்களுக்கு நல்லது.
மீனம்
மீனம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.பொருளாதார ரீதியான முன்னேற்றம் அதிகமாக இருக்கும் .வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள் ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியமான விஷயத்தில் மிக கவனமுடன் இருப்பது நல்லது.