மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சியில் இறஙகுவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக எதிர்பார்க்கும் விஷயங்கள் அமோகமாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு இன்றைய நாளில் நினைத்தது நடக்கும் வாய்ப்புகள் அதிகம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முயலவீர். பிள்ளைகளால் உங்களுக்கு நற்பெயர் உண்டாகும் .சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு நல்ல நாளாகவே அமையும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு நன்மைகள் அடைவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய திட்டங்களை தீட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அமையும்.பெருமபாலும் லாபங்கள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
கடகம்
கடக ராசி அன்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் வெற்றியை நோக்கி பயணிக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த பணவரவு கட்டும் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு ஜாக்கிரதை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களிடம் பேசும் பொழுது கொஞ்சம் கனிவாக பேசுவது மிக்க நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலனைக் பெறுவீர். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே உள்ள அன்பு அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் பண வரவு மிக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் நிதானம் அவசியம். கணவன் மனைவிக்கு இடையே முன் கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பொறுமையை கையாள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பிரச்சினைகள் குறைந்து புதிய வாய்ப்புகள் யாவும் தேடி வந்து அமையும். ஒரு சிலர் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க பெரும்பாடு படுவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே என்றும் இல்லாத அளவுக்கு இன்றைய நாளில் உங்களுக்குள் எதையும் எதிர்கொள்ளும் துணிவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எளிதில் முடியக்கூடிய வேலையில் கூட சற்று கால தாமதம் ஏற்பட கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆடம்பர செலவுகளை குறையுங்கள் அது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பெண்கள் கடினமாக உழைக்க வேண்டிய தருணம் இது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே பொறுமையை கையாள வேண்டியது அவசியமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் மற்றும் வீண்அலைச்சலானது ஏற்பட வாய்ப்புண்டு. மற்றவருடன் பேசும் பொழுது நீங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்பதே நலம்.
தனுசு
இன்று நண்பர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும் ராசிக்காரர்கள் தனுசு ராசிக்காரர்கள்.
பொருளாதாரத்தில் ஏற்ற நிலை கிடைக்கும் ஆதலால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் இணக்கமாக செல்லுங்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றுவீர்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நீங்கள் இன்றைய நாளில் உங்களுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை உணர்ந்து கச்சிதமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் யாவருக்கும் அவனகளலுங மறைமுக எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணியாளர்களின் ஆதரவானது உங்கள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் எல்லோருக்குமே முன்னேற்றம் உறுதி. சகோதர சகோதரிகளின் கருத்து வேறுபாடுகள் எளிதில் நீங்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவை இல்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். உத்தியோகத்தில் இருப்பவர்களே உங்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து புதிய முயற்சிகளுக்கும் அங்கீகாரம் எளிதாக கிடைக்கும். லாபம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள் அது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளானது எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமான நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாவரும் ஒரு முடிவை எடுக்கும் முன் பலமுறை ஆலோசிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். இல்லத்தரசிகளுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே சத்தானதாக உண்ணுங்கள்.
இன்றைய ராசி பலனால் இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்