தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இதற்காக 856 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க 856 முதன்மை கண்காணிப்பாளர்கள், 856 சோதனை செய்யும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
18 சப்கலெக்டர் பணியிடங்கள், 19 டி.எஸ்.பி, 10 வணிகவரித்துறை உதவி ஆணையர், 14 கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் 4 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி உள்ளிட்ட 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வெளியிட்டது. இந்த குருப் -1 தேர்வுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இதில் 1,28,401 ஆண்கள், 1,28,825 பெண்கள், 11 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத வருபவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தேர்வு அறைகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.