தமிழக அரசு தேர்தல் நெருங்கும் நேரத்தில் கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு கமிஷன் அடிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தை மீளாக்கடனில் தள்ளியிருக்கும் கடன் வாங்கியாவது கமிஷன் அடித்துவிட வேண்டும் என கடைசி மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 2,855 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு மாதமே எஞ்சியிருக்கின்ற சூழலில், டெண்டர் விடும் அதிகாரிகளும், துறைச் செயலாளர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவது ஏன்? கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் ஒரே கேடுகெட்ட ஆட்சி அதிமுக ஆட்சிதான். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முறைகேடான டெண்டர்கள் அனைத்தும் ரத்தாகும். தவறிழைத்தவர்களுக்கு தண்டனையும் உறுதி” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.