ஆவடி அடுத்து உள்ள திருமுல்லை வாயல் சரஸ்வதி நகர் மெயின் ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருபவர் சுனில் இவருடைய வயது 22. சம்பவத்தன்று இவரது கடையில் இரண்டு பெண்கள் கம்மல் வாங்க வந்துள்ளார்கள். பின்னர் இருவரும் பல வகையான நகைகளை பார்த்துவிட்டு கடைசியில் கம்மல் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர் .
அவர்கள் சென்ற பின்னர் கடைக்காரர் சுனில், எல்லாவற்றையும் சரி பார்த்து உள்ளார் அப்போது 8 கிராம் எடையுள்ள இரண்டு கம்மல் மாயமானது அவருக்கு தெரிய வந்தது. உடனே அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்துள்ளார். இதில் நகை வாங்க வந்த இரு பெண்களில் ஒருவர் கம்மலை திருடியது தெரிய வந்துள்ளது உடனே சுனில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் தற்போது தேடி வருகின்றனர்.