நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று நாடு முழுவதும் திரையரங்குகளில் திரையிடப் பட்டன. சினிமா படப்பிடிப்பு முடிந்த பிறகும் தியேட்டர்களில் இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக வெளியிடப்படாமல் இருந்தது. திரையரங்களில் மட்டுமே தனது திரைதிரைப்படத்தை வெளியிட வேண்டும் என்பதிலும், ஓடிடி-யில் தனது சினிமாவை வெளியிட வேண்டாம் என்பதிலும் விஜய் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து 50 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதித்து தியேட்டர்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தியேட்டர்கள் திறக்கப்பட்டு முதலில் மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் 100 சதவீத இருக்கைகளிலும் ரசிகர்களை அனுமதித்து மாஸ்டர் திரைப்படம் திரையிடப்பட்டது. இதயடுத்து விதிமுறைகளை மீறியதாக அந்த தியேட்டருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த தியேட்டர் மீது காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்