தமிழக துணை முதல்வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘நலம் பெற வாழ்த்துக்கள்’ என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “பெங்களூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய அம்மையார் திருமதி சசிகலா நடராஜன் பூரண குணமடைந்து இனி வரும் காலங்களில் வேண்டும். இனிவரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று, அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல; என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு எனவும் குறிப்பிட்ட அவர் இப்படிக்கு அம்மாவின் உண்மைத் தொண்டன் வி.ப. ஜெயபிரதீப் என குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க-வை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலரே வருக என சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியதற்காக திருநெல்வேலி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலர் சுப்ரமணிய ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. இந்த நிலையில் ஓ.பி.எஸ்ஸின் மகனின் இந்த ஃபேஸ்புக் போஸ்ட் பரபரப்பை கிளப்பியுள்ளது