தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் திருச்சி மேலசிந்தாமணியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கேப்டன் மூன்றாவது அணி அமைக்க தயாராக உள்ளார். மூன்றாவது அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்துகொண்டு வெற்றி பெற்றார். எனவே கேப்டன் பேசவேண்டும், நடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை, எங்கிருந்தாலும் அவர் வெற்றி பெறுவார். ஏற்கனவே பேச வேண்டிய பல காரியங்களை அவர் பேசிவிட்டார்.
கேப்டனுடைய உடல்நிலை சரியில்லாததால் தே.மு.தி.க-வின் நிலை தேய்ந்து போகவில்லை. அவர் மீண்டும் வருவார். தே.மு.தி.க குறித்து விமர்சனத்துக்கு நாங்கள் பதிலளிக்க விரும்பவில்லை. கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் கட்சியின் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.