மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 30 வயது இளைஞர் ஒருவர் தன்னைவிட வயது அதிகமான பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மிகவும் நெருக்கமாக இருந்த இவர்கள் காதல் திருமணத்தை நோக்கி சென்றது. இந்தநிலையில் இவர்களின் காதல் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் காதலில் உறுதியாக இருந்த அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் தஞ்சம் ஆகி உள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
அப்போது அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் திருமணத்தில் ஆர்வம் காட்டாத அந்த இளைஞர், திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருவருக்குமிடையில் வழக்கம்போல் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் ஆவேசமடைந்த காதலன் தனது காதலியை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார். இதில் காதலி உயிரிழந்ததால், இதனை வெளியே கூறாமல் மறைக்க திட்டம் திட்டியுள்ளார். அதன்படி, கொலை செய்த காதலியின் உடலை தனது வீட்டிலுள்ள குளியலறையின் சுவற்றுக்குள் வைத்து கான்க்ரீட் மூலம் பூசியுள்ளார்.
இந்நிலையில் வெகு நாட்களாக அந்த பெண் தங்களுடன் தொடர்பில் இல்லாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அந்த இளைஞர் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அதன்பின்னர் அந்தபெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அந்த காதலனை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் குளியலறையில் புதிதாக சிமெண்ட் பூசியுள்ளதை கண்டு அதை இடித்து பார்த்தபோது உள்ளே அந்தபெண்ணின் உடல் எலும்புக்கூடாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து போலீசார் அந்த இளைஞன் மிது கொலை வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை சிறையில் அடைத்துள்னர். காதலனோடு ஓடிப்போன தன் மகள் எலும்புகூடாக இருப்பதை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். தற்போது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.